TN Local Holiday on July 29 2024 Details
தமிழகத்தில் பொதுவாக ஏதாவது பண்டிகை, விசேஷ நாட்களிலோ அல்லது திருவிழா நாட்களிலோ மக்கள் சேர்ந்து கொண்டாட வேண்டும் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு சிரமம் ஏற்பட கூடாது என்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இப்போது வரும் ஜூலை 29ம் ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது அதனை பற்றி பார்ப்போம்
மேலும் அரசு வேலைவாய்ப்பு தகவல்களுக்கு நமது குழுவில் இணையுங்கள்
- WhatsApp – Click here to Join
- Telegram – Click here to Join
திருவள்ளூர் மாவட்டத்த்தில் அமைந்துள்ள திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் முருகனின் ஆறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடாக உள்ளது. இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டுமல்லாது பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வருகின்றனர்.திருத்தணியில் ஆடிக்கிருத்திகை கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம்.
உள்ளூர் விடுமுறை
அந்த வகையில் திருத்தணி முருகன் கோவிலில் ஜூலை 29 ம் தேதி ஆடிக்கிருத்திகை திருவிழா நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அன்று திருவள்ளூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் உத்தரவிட்டுள்ளார். இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில், ஆகஸ்ட் 10ம் தேதி வேலை நாளாக செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.